World News

News, World News

ஹோர்முஸ் முதல் வொஷிங்டன் வரை: அமெரிக்கா–ஈரான் அமைதி முயற்சிகள் தீவிரம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலையைத் தணிக்க பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் மூத்த அரசியல்வாதி ஒருவர், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக செய்திகளை பரிமாறி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், இரு தரப்பிலிருந்தும் சில நேர்மையான சிக்னல்கள் வெளியாகியுள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் […]

News, World News

தொழில்நுட்ப முன்னேற்றம் காரணம் அல்ல: ஊழியர் பாதுகாப்பில் சீன தீர்ப்பு

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை காரணமாகக் காட்டி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாது என சீன நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனம், AI பயன்பாட்டால் பணிகள் குறைந்ததாகக் கூறி தரக் கட்டுப்பாட்டு பணியாளர் ஒருவர் மீது ஊதியக் குறைப்பை மேற்கொள்ள முயன்றுள்ளது. அந்த பணியாளர் அதை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, தொழில்நுட்ப முன்னேற்றத்தை காரணமாகக் காட்டி அவரை பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்

News, World News

சர்வதேச சந்தையில் தங்க விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,615.3 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.82 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

News, World News

தேர்தல் முடிவுகளுக்கான பிரத்தியேக இணையதளம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளன. இந்த முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் பிரத்தியேக இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. 👉 https://results.eci.gov.in/ என்ற இணையதளத்தில் தொகுதிவாரியாகவும் சுற்றுவாரியாகவும் தேர்தல் நிலவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், முடிவுகளை ECINET மற்றும் Voter Helpline செயலிகளின் மூலமாகவும் பார்வையிட முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News, World News

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஈரானிய கப்பல்: இந்தோனேசிய கடல் வழியாக எண்ணெய் போக்குவரத்து

அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பையும் மீறி, ‘HUGE’ எனப்படும் ஈரானிய கப்பல் இந்தோனேசியாவின் லோம்போக் நீரிணை வழியாக ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கி பயணித்து வருவதாக சர்வதேச கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த கப்பல் சுமார் 19 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணெயின் மொத்த மதிப்பு சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

News, World News

தர்ப்பூசணி சம்பவம் மர்மம் தீவிரம்: குடும்ப மரணத்தில் புதிய சந்தேகங்கள்

இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் தர்ப்பூசணி சாப்பிட்டதற்குப் பின்னர் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், சிகிச்சை பலனின்றி குறுகிய நேர இடைவெளியில் அனைவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை மற்றும் உணவு

News, World News

ஈரானின் நீரிணை திறப்பு திட்டத்தை ட்ரம்ப் நிராகரித்தார் – புதிய பரபரப்பு தகவல்

அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சிரேஷ்ட ஈரானிய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த முன்மொழிவின் முக்கிய நோக்கம் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் திறந்து, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். மேலும், சிக்கலான அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக ஒத்திவைத்து, பின்னர் அதனை இறுதி கட்டத்திற்கு

News, World News

அடுத்த ஆறு மாதங்களில் தாக்குதல் அபாயம்: UK அரசு எச்சரிக்கை

UK அரசாங்கம், நாட்டில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டத்தை “கணிசமானது” என்ற நிலையிலிருந்து “தீவிரம்” என்ற உயர்ந்த நிலைக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த முடிவுக்கு உடனடி காரணமாக London வடக்கு பகுதியில் இரண்டு யூத ஆண்கள் மீது நடைபெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பயங்கரவாதச் சம்பவமாக கருதப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அரசாங்கம் தெரிவித்ததாவது, இஸ்லாமிய அடிப்படைவாதக்

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் குறைவு பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,628 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேவேளை, வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு 74 டொலர்களாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், WTI ரக மசகு எண்ணெய் விலையில் உயர்வு காணப்படுகிறது. ஒரு பீப்பாய் WTI எண்ணெய் 105.7 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. மாறாக, பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 110.4 டொலர்களாகக் குறைந்துள்ளது. மேலும்,

News, World News

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

அவுஸ்திரேலியாவில் பிறந்து அல்லது குடியேறி வாழும் இலங்கை மக்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 184,800 ஆக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை, 2024 ஜூன் மாதத்தில் பதிவான 172,800 மற்றும் 2023 ஜூன் மாதத்தில் இருந்த 158,300 ஆகியவற்றை ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது. தற்போது, அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டில் பிறந்தவர்களில் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது. கடந்த

Scroll to Top