
அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பையும் மீறி, ‘HUGE’ எனப்படும் ஈரானிய கப்பல் இந்தோனேசியாவின் லோம்போக் நீரிணை வழியாக ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கி பயணித்து வருவதாக சர்வதேச கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பல் சுமார் 19 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணெயின் மொத்த மதிப்பு சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
