சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் குறைவு பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,628 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேவேளை, வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு 74 டொலர்களாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், WTI ரக மசகு எண்ணெய் விலையில் உயர்வு காணப்படுகிறது. ஒரு பீப்பாய் WTI எண்ணெய் 105.7 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
மாறாக, பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 110.4 டொலர்களாகக் குறைந்துள்ளது. மேலும், இயற்கை எரிவாயுவின் விலையும் 2,760 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
