UK அரசாங்கம், நாட்டில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டத்தை “கணிசமானது” என்ற நிலையிலிருந்து “தீவிரம்” என்ற உயர்ந்த நிலைக்கு மாற்றியுள்ளது.

இதன் மூலம், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்த முடிவுக்கு உடனடி காரணமாக London வடக்கு பகுதியில் இரண்டு யூத ஆண்கள் மீது நடைபெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பயங்கரவாதச் சம்பவமாக கருதப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசாங்கம் தெரிவித்ததாவது, இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மற்றும் தீவிர வலதுசாரி அமைப்புகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. சமீப காலங்களில் யூத வழிபாட்டு இடங்கள், மருத்துவ அவசர வாகனங்கள் மற்றும் யூத சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
சில சம்பவங்கள் வெளிநாட்டு அரசியல் தொடர்புடைய குழுக்களால் தூண்டப்படுவதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
Keir Starmer தலைமையிலான அரசு, யூத சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 25 மில்லியன் பவுண்டுகள் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
மேலும், மேயர் சாதிக் கான் லண்டன் வீதிகளில் கூடுதல் ஆயுத காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
