News

News, World News

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஈரானிய கப்பல்: இந்தோனேசிய கடல் வழியாக எண்ணெய் போக்குவரத்து

அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பையும் மீறி, ‘HUGE’ எனப்படும் ஈரானிய கப்பல் இந்தோனேசியாவின் லோம்போக் நீரிணை வழியாக ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கி பயணித்து வருவதாக சர்வதேச கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த கப்பல் சுமார் 19 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணெயின் மொத்த மதிப்பு சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

Local News, News

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இலங்கை வருகை: மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சற்று முன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறுகிறது. இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Local News, News

எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: முச்சக்கர கட்டண உயர்வுக்கு கோரிக்கை

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்ததாவது, பெற்றோல் விலை ரூ. 12 உயர்ந்துள்ள நிலையில் தற்போதைய கட்டண அமைப்பு தொடர முடியாது என்பதால் மாற்றம் அவசியம் என கூறினார். தற்போது மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை முச்சக்கர கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது.

News, World News

தர்ப்பூசணி சம்பவம் மர்மம் தீவிரம்: குடும்ப மரணத்தில் புதிய சந்தேகங்கள்

இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் தர்ப்பூசணி சாப்பிட்டதற்குப் பின்னர் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், சிகிச்சை பலனின்றி குறுகிய நேர இடைவெளியில் அனைவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை மற்றும் உணவு

Local News, News

வரி மற்றும் டொலர் உயர்வு தாக்கம்: வாகன விலை மேலும் உயரும் அபாயம்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டமை மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த மாற்றம் அனைத்து வகையான வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபல வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் எனவும்

Local News, News

தேசிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்: நவீன மாற்றங்களுக்கு அரசு நடவடிக்கை

தற்போதைய சமூக மாற்றங்கள் மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு ஏற்ப சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தை மீளாய்வு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1998 ஆம் ஆண்டு இலக்கம் 50

News, Uncategorized

எரிபொருள் விலை உயர்வு: புதிய விலைகள் அமுலுக்கு வந்தது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் உயர்வை அறிவித்துள்ளது. புதிய விலைகளின்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டு ரூ. 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றருக்கு ரூ. 15 உயர்த்தப்பட்டு ரூ. 470.00 ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஒட்டோ டீசல் லீற்றருக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 392.00 ஆகவும், சுப்பர் டீசல் லீற்றருக்கு ரூ.

Astrology, News

இன்றைய ராசி பலன் 3 மே 2026

இன்று மே 3, 2026 சித்திரை மாதம் 20ம் தேதி ஞாயிறு கிழமை, விருச்சிக ராசியில் விசாகம், அனுஷ நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று புதாதித்ய யோக நாள். இன்று மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல். இன்று மே 3, 2026 ஞாயிறு கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 20ம் தேதி, விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று

Astrology, News

இன்றைய ராசி பலன் 2 மே 2026

இன்று மே 2, 2026 சித்திரை மாதம் 19ம் தேதி சனிக் கிழமை, துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சுக்கிர உச்சத்தால் மாளவ்ய யோகம் பலன் கிடைக்கும் நாள். இன்று மீன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது இன்று மே 2, 2026 சனிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 19ம் தேதி, துலாம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம்

News, Uncategorized

வெளிநாட்டு பயணங்களில் பிக்குகளுக்கு புதிய கண்காணிப்பு முறை

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு, இனி அவர்களின் பிரதான தேரர்கள், பிரதேச தலைவர்கள் மற்றும் அந்தந்த பீடங்களின் (Chapter) மகாநாயக்க தேரர்களின் பரிந்துரைகள் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னதாக பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, தற்போது மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழ், பீடங்களின் பதிவாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு

Scroll to Top