
புதிய வாகனப் பதிவுகளுக்கு இலக்கத் தகடுகள் வழங்க முன்னுரிமை
சுமார் ஓராண்டு கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 8, 2026 முதல், வெரஹெரவிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தில் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் உத்தியோகபூர்வமாக மீளத் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் தற்போது இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் பகல் […]









