
சீனாவில் காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 28 பேர் உயிரிழப்பு
தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் நகரில் அமைந்துள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் தகவலின்படி, ஜின்ஜியாங் நகரில் இயங்கி வரும் ‘ஹுய்டெங் ஃபுட்வேர்’ (Huiteng Footwear) தொழிற்சாலையில் நேற்று நண்பகல் சுமார் 12.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், 500-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களும் […]









