O/L மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பெறுபேறுகள் விரைவில்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பரீட்சை விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு, பெறுபேறுகள் ஒழுங்கமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், தற்போது இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இதனால், அடுத்த வார நிறைவுக்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர […]





