Search Results for: 3

Here are the search results for your search.

Local News, News

“மின்சார நெருக்கடி உண்மையா? அமைச்சர் நேரடி விளக்கம்”

நாட்டில் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எந்தத் திட்டமும் தற்போது அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாகவும், செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி வளங்களைப் பயன்படுத்தி நிலைமை கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2025–2026 ஆண்டுக்கான நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மின்சார உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டாலும், அதன் சுமை மக்களிடம் […]

Local News, News

மே மாத இறுதிக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு – பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவு உதவி

டிட்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, மிக அவசரமான சில விசேஷ நிலைகளைத் தவிர, அனைத்து பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று (22) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்குவது அல்லது வீடு வாங்குவதற்காக 50 இலட்சம் ரூபாய்

Local News, News

தங்க விலை சரிவு: நகை வாங்குவோருக்கு சிறந்த வாய்ப்பு

இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, நேற்றுடன் (21) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று

Local News, News

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் 27ஆம் திகதி முதல் ஆரம்பம்: UGC அறிவிப்பு

சமீபத்தில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் நிகழ்நிலை (Online) முறையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விரிவான அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய கைநூல் (Handbook) விரைவில் வெளியிடப்படும் எனவும் UGC

Local News, News

யாழில் அதிகாலை விபத்து சோகம்: கனரக வாகனம் மோதியதில் தந்தை–மகன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். உந்துருளியில் பயணித்த இருவரும் கனரக வாகனத்துடன் நேரிட்ட மோதலில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 65 வயதுடைய தந்தையும், 29 வயதுடைய மகனும் ஆவார். இவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

News, World News

முடிவை தீர்மானிக்கும் நாள்: தமிழக சட்டசபை தேர்தல் நாளை ஆரம்பம்!

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, நாளை (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில், சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக்

Local News, News

இன்று பிற்பகல் முதல் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – அவசர அறிவிப்பு

இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை, குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும், காலையில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News, Uncategorized

அஸ்வெசும பயனாளர்களுக்கு அரசாங்கத்தின் பண்டிகை முன்பணம்: ஏப்ரல் கொடுப்பனவுகள் இன்று முதல்!

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பண்டிகைக் கால செலவுகளை முன்னிட்டு, குறிப்பாக முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த நிதியை தாமதமின்றி வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இந்த மாத கொடுப்பனவுகளில் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நிதி இரண்டு கட்டங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு

Astrology, News

இன்றைய ராசி பலன் 22 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 22, 2026 புதன் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 09ம் தேதி, மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் குரு – சந்திரன் சேர்க்கையால் குரு சந்திர யோகம் உருவாகிறது. இன்று விருச்சிகம் ராசியில் உள்ள விசாகம் பின்பு அனுஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 22, 2026 சித்திரை மாதம் 09ம் தேதி புதன் கிழமை, மிதுன ராசியில் மிருகசீரிஷம்

Health & Beauty Tips, News

சன்ஸ்கிரீன் பயன்பாட்டின் முக்கியத்துவம்: இளம் வயதினர்கள் செய்யும் பொதுவான தவறுகள்

Sunscreen important for youngsters: இளம் வயதில் வயதான தோற்றம், டானிங், பிக்மெஷன்டேஷன் போன்ற பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் அவசியமாகும். இளைஞர்கள் எந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம், எவ்வளவு SPF அளவு நல்லது, பலரும் செய்யும் சன்ஸ்கிரீன் தவறுகள் போன்ற விவரங்களை சரும மருத்துவர் விளக்கியுள்ளார் பல இளைஞர்கள் சன்ஸ்கிரீன் என்பது கடற்கரை பயணம் அல்லது சுற்றுலா செல்லும்போது பயன்படுத்த வேண்டிய ஒன்றாக கருதுகின்றனர். ஆனால், வேலைக்கு செல்லும்போது, கல்லூரிக்கு நடந்து செல்லும்போது அல்லது வெளியில்

Scroll to Top