
Cool Cylon Engineering
Cool Cylon Engineering provides expert AC and washing machine repair services in Jaffna, offering reliable, fast, and affordable solutions for homes and businesses.

Cool Cylon Engineering provides expert AC and washing machine repair services in Jaffna, offering reliable, fast, and affordable solutions for homes and businesses.

Joy Fashion offers beautifully handcrafted jewellery in Jaffna, blending traditional craftsmanship with modern designs. Custom orders available for unique, stylish accessories for every occasion.

Custom printed textile, non-woven, paper, and board bags in Jaffna. High quality, eco-friendly, affordable packaging solutions for your business.

Abacore Abacus Classes ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகளுக்கு வேகமான மற்றும் துல்லியமான மனக்கணக்கு திறனை கற்பிக்கிறது. இன்று சேருங்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து வாக்களித்தார். இதேவேளை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு

போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி சேவைகள் நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, முதற்கட்டமாக தெஹ்ரான் (Tehran) மற்றும் மஷாத் (Mashhad) நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவைகள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. அதே நாளில் திரும்பும் விமானச் சேவைகளும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த உள்நாட்டு விமான

நாட்டுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி தொடர்வதற்காக, மேலும் ஒரு டீசல் கப்பல் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது குறித்து கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது, வரவுள்ள கப்பலில் 9,500 மெற்றிக் தொன் டீசல் அடங்கியுள்ளது. மேலும், இந்த மாத இறுதிக்குள் மற்றொரு பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. அந்தக் கப்பலில் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைக்குழு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் சிரமத்தை எதிர்கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்றும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8.00 மணி வரை (மேலும் 2 மணி நேரம்)

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அரசு நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் இந்த தகவல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள கணினி அமைப்பு மிகவும் பழமையானதாகவும், அதில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தற்போதைய கணினி அமைப்பை நவீனமயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த மேம்படுத்தல் நிறைவடைந்த பின்னர், சுமார்

இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரித்துள்ளது. இந்த மோசமான நிலையைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நடைமுறைசார் தீர்வுகளை கொண்டு வர வேண்டும் எனவும் சபை வலியுறுத்தியுள்ளது. உலகளவில் மருந்து விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் மற்றும் கப்பல் கட்டண உயர்வுகள் விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரூபாயின் பெறுமதி சரிவு மற்றும் இறக்குமதி செலவுகளின் உயர்வு மருந்து இறக்குமதியில்