
கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த பணப் பரிமாற்ற நிறுவனம் மூலம் பெருமளவிலான பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் நான்கு வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
