Search Results for: 3

Here are the search results for your search.

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயர்வைப் பதிவு செய்துள்ளன. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,070.32 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 58.94 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, எதிர்வரும் நாட்களில் உள்நாட்டு தங்க சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Local News, News

இலங்கையில் இன்று உயர்ந்த தங்க விலை

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டு ரூ.386,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலையும் ரூ.5,000 அதிகரித்து ரூ.355,200 ஆக உயர்ந்துள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.48,250 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.44,400 ஆகவும் விற்பனை

Local News, News

மீன் சந்தையில் மீன் விலை சரிவு: வரத்து அதிகரிப்பால் பொதுமக்களுக்கு நிவாரணம்

பேலியகொடை மத்திய மீன் சந்தையில் பல்வேறு மீன் வகைகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள், தற்போது குறைந்த விலையில் சந்தைக்கு வந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அண்மையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாளை மீனின் மொத்த விலை தற்போது 400 ரூபாவாகக் குறைந்துள்ளது. மேலும், ஒரு கிலோ பலயா மற்றும் லின்னா மீன்கள் தற்போது 900 ரூபாவிற்கு மொத்த

News, Uncategorized

இளைஞர் வேலையின்மை கணிசமாகக் குறைந்தது: புதிய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் விரைவில் – பிரதி அமைச்சர் தினிந்து சமன்

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் இளைஞர் வேலையின்மை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்னாயக்க தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சியுடனும், தனியார் துறையுடன் அரசாங்கம் இணைந்து மேற்கொண்ட வேலைவாய்ப்பு உருவாக்கும் நடவடிக்கைகளின் மூலமும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திவுலப்பிட்டியவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி மையத்தில் நடைபெற்ற ‘இளைஞர் உத்வேக விளையாட்டு விழா 2026’ இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம

Local News, News

இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு குறித்து பிரதமருடன் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் ஆலோசனை

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (24) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது, 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள “இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு (SLEIS 2026)” தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI)

News, Uncategorized

இன்றைய வானிலை: தென்மேற்குப் பிராந்தியத்தில் மழை அதிகரிப்பு; பலத்த காற்று வீசும் எச்சரிக்கை

இன்று இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அதேவேளை, ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது. மத்திய

Local News, News

தில்லையடியில் வேன்–முச்சக்கரவண்டி மோதி விபத்து: 5 பேர் காயம்

புத்தளம் மாவட்டத்தின் தில்லையடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதுடன், பின்னர் அருகிலிருந்த கட்டடமொன்றிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தில்லையடி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேனின் முன்பாக கார் ஒன்று திடீரென வீதியைக் குறுக்கே கடந்துள்ளது. அதனைத் தவிர்க்க முயன்றபோது வேன் சாரதி வாகனத்தின்

News, World News

வெனிசுலா கடற்கரையை உலுக்கிய 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் மக்கள் பீதி

வெனிசுலாவின் கடற்கரைப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிரமாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் அதிர்வால் உயர்மாடிக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் பலத்த குலுக்கலுக்குள்ளானதால், அச்சமடைந்த மக்கள் வீதிகளுக்கு விரைந்தனர். ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் தகவலின்படி, கராகஸ் நகரிலுள்ள சில கட்டடங்களின் வெளிப்புறச் சுவர்களில் குறிப்பிடத்தக்க விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இந்த நிலநடுக்கத்தைத்

Cinema, News

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘பட்டாம்பூச்சி’ பாடல் வெளியீடு

‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகும். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பட்டாம்பூச்சி’ பாடலும் அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர், சுதா, சுனில், பவானி ஸ்ரீ, காளி வெங்கட், ஜோர்ஜ் மரியான், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள

Local News, News

சோளங்கந்தை தோட்டத்தில் துயரச் சம்பவம்; பெண் தொழிலாளர் மரணம்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தேயிலை பறித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த பெண்ணை பாம்பு கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த ஏனைய தொழிலாளர்கள் உடனடியாக அவரை நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம்

Scroll to Top