
பேலியகொடை மத்திய மீன் சந்தையில் பல்வேறு மீன் வகைகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள், தற்போது குறைந்த விலையில் சந்தைக்கு வந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அண்மையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாளை மீனின் மொத்த விலை தற்போது 400 ரூபாவாகக் குறைந்துள்ளது.
மேலும், ஒரு கிலோ பலயா மற்றும் லின்னா மீன்கள் தற்போது 900 ரூபாவிற்கு மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த கூரே தெரிவித்துள்ளார்.
மீன் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதே இந்த விலைச் சரிவிற்கான முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
