Search Results for: 3

Here are the search results for your search.

News, Uncategorized

இன்று பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; 50 மி.மீ. வரை மழை பதிவாகலாம்

இன்று (29) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊவா மாகாணத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

Local News, News

ஆறு ஆண்டுகளில் 2.67 இலட்சம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை கைவிட்டனர்; அதிர்ச்சி தகவல் வெளியீடு

2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் மொத்தம் 267,138 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018–2024 காலப்பகுதிக்கான வருடாந்திர பாடசாலை மாணவர் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் தரம் முதல் பத்தாம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும், கல்வியை இடைநிறுத்தியோரின் விகிதங்களும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டு முறையின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2018 ஆம் ஆண்டில்

News, World News

அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பதவி விலகும் செர்பிய ஜனாதிபதி

செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக நீடித்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச் இன்னும் சில வாரங்களில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் முன்கூட்டியே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற ஆதரவாளர்களின் பேரணியில் உரையாற்றிய வுசிச், “இன்னும் சில வாரங்கள் மட்டுமே நான் ஜனாதிபதியாக இருப்பேன். அதன் பின்னர் பதவியை இராஜினாமா செய்வேன்” என அறிவித்தார். 2027

Local News, News

முதியோர் உதவித்தொகை பெற முடியாதவர்களுக்கு அரசின் புதிய நடவடிக்கை

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் அரசின் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம், கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது 70 வயது மற்றும் அதற்கு

News, Sports News

கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து; நொக்-அவுட் சுற்று போட்டிகள் அறிவிப்பு

கால்பந்து கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமான ‘சுப்பர் 32’ சுற்றுக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றில் உலகத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் பல முன்னணி அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜேர்மனி – பராகுவே, பிரான்ஸ் – சுவீடன், தென்னாபிரிக்கா – கனடா, நெதர்லாந்து – மொரோக்கோ, போர்த்துக்கல் – குரோஷியா, ஸ்பெயின் –

News, Uncategorized

நாளை வரை அமலில் செம்மஞ்சள் எச்சரிக்கை; மீனவர்கள் அவதானம்

காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (29) முற்பகல் 11.00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்

Local News, News

மத்திய கிழக்கு நெருக்கடிக்கும் மத்தியிலும் தேங்காய் ஏற்றுமதியில் முன்னேற்றம்

கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் காணப்பட்ட போதிலும், ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது. இந்த சவால்களை சமாளிப்பதற்காக, ஏற்றுமதியாளர்கள் மாற்று போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேங்காய் மற்றும்

Astrology, News

இன்றைய ராசி பலன் 27 ஜூன் 2026 

இன்று ஜூன் 27, 2026 ஆனி மாதம் 13ம் தேதி சனிக் கிழமை, விருச்சிக ராசியில் அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனம் பத்ர யோகம், கடகத்தில் கஜலட்சுமி யோகமும், திரிகோண யோகம் நடக்கக்கூடிய நாள். இன்று மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சனி பிரதோஷம். இன்று 27 ஜூன் 2026 சனிக் கிழமை, பராபவ வருடம், ஆனி மாதம் 13ம் தேதி விருச்சிக

Health & Beauty Tips, News

தேர்வில் Top Marks வேண்டுமா?எப்படி படிக்கணும் தெரியலையா? இதுதான் Perfect Exam Strategy!

தேர்வுக்கு தயாராகும் போது பெரும்பாலான மாணவர்கள் சந்திக்கும் பெரிய சிக்கல் “எப்படி தொடங்குவது?”, “எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும்?” என்பதே. வெறும் அதிக நேரம் படிப்பது மட்டும் போதாது. அந்த நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். சரியான திட்டமிடல் இருந்தால் குறைந்த நேரத்திலும் நல்ல மதிப்பெண் பெற முடியும். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் முழு பாடத்திட்டத்தையும் (syllabus) ஒரு பட்டியலாக எழுதுவது. எந்த பாடத்தில் எத்தனை பாடப்பகுதிகள் உள்ளன என்பதை தெரிந்து

News, World News

49,000 பேர் காணாமல் போனதாக அச்சம்:வெனிசுலா அவசரநிலை

வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் 49,000 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 125 ஆண்டுகளில் வெனிசுலாவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி யாராகுய் (Yaracuy) மாநிலத்தின் சான் பெலிப் (San Felipe) மற்றும் யுமாரே (Yumare) பகுதிகளுக்கு அருகில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கராகஸ் மற்றும் லா குயிரா

Scroll to Top