காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (29) முற்பகல் 11.00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சிலாபம் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் அலைகளின் உயரம் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
