Local News

Local News, News

நாணயச் சந்தையில் மாற்றம்: டொலர் விற்பனை விலை மீண்டும் சரிவு

இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.340.44 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.341.09 ஆக இருந்த நிலையில், இன்று அது ரூ.0.65 குறைந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் சரிவை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

Local News, News

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: புதிய தரவுகள் வெளியீடு

கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 9.90 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 124,551 ஆகக் குறைந்துள்ளது. இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும்

Local News, News

டெங்கு அச்சம் உச்சத்தில்: மருத்துவமனைகள் கொள்ளளவை எட்டியதாக எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலைமை இன்னும் கவலைக்கிடமானதாக இருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 21,565

Local News, News

டோஹா – கொழும்பு விமான சேவைகள் முழுமையாக மீள ஆரம்பம்; கட்டார் எயார்வேஸ் தினமும் 5 சேவைகள்

கட்டார் எயார்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்பு இடையிலான தனது விமான சேவைகளை இன்று (01) முதல் முழுமையாக மீள ஆரம்பித்துள்ளது. இதன்படி, தினமும் 5 விமான சேவைகள் என்ற அடிப்படையில், வாரத்திற்கு மொத்தம் 35 விமான சேவைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இயக்கப்படவுள்ளன. இந்த சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, இலங்கையின் சுற்றுலாத்துறை, வர்த்தகப் பயணங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டோஹா ஊடாக மத்திய கிழக்கு,

Local News, News

இலங்கையில் 40% பேர் இன்னும் வரி வலையில் இல்லை; உள்நாட்டு இறைவரி திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையில் சுமார் 40 சதவீத மக்கள் இன்னும் வரி வலையில் இணைக்கப்படவில்லை என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை எந்த மதிப்பீடும் மேற்கொள்ளப்படவில்லை என்று திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். இதனிடையே, பொதுமக்களிடம் வரி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வரி

Local News, News

தங்க விலையில் திடீர் சரிவு; பவுணுக்கு ரூ.3,000 குறைவு

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01) பவுணுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (30) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 379,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 348,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 24 கரட்

Local News, News

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை; புதிய சட்டத் திருத்தம் முன்மொழிவு

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் கீழ், தற்போது நடைமுறையில் உள்ள 10,000 ரூபாய் அபராதத்தை 1 இலட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டமூலம் வழிவகை செய்கிறது. அத்துடன், வழக்கின் தன்மை மற்றும் குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து, குற்றவாளிகளுக்கு அபராதம், சிறைத்

Local News, News

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு; சந்தையில் புதிய திருப்பம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், இன்று (29) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,065.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.75 அமெரிக்க டொலராக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு தங்கச் சந்தையில் விலைகள் ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு இலங்கையின் தங்கச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, தங்கத்தின் விலையில்

Local News, News

ஆறு ஆண்டுகளில் 2.67 இலட்சம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை கைவிட்டனர்; அதிர்ச்சி தகவல் வெளியீடு

2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் மொத்தம் 267,138 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018–2024 காலப்பகுதிக்கான வருடாந்திர பாடசாலை மாணவர் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் தரம் முதல் பத்தாம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும், கல்வியை இடைநிறுத்தியோரின் விகிதங்களும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டு முறையின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2018 ஆம் ஆண்டில்

Local News, News

முதியோர் உதவித்தொகை பெற முடியாதவர்களுக்கு அரசின் புதிய நடவடிக்கை

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் அரசின் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம், கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது 70 வயது மற்றும் அதற்கு

Scroll to Top