
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஜனவரி 1 முதல் மே 17 வரை மொத்தம் 951,742 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 221,953 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இதேவேளை, 2026 மே 1 முதல் மே 17 வரை மட்டும் 75,465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
