
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் மக்களின் துயர வரலாற்றை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக அரசியல் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன் தமிழகம் என்றும் இணைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நீதி கோரிக்கைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்களின் வேதனையான வரலாற்றை நினைவுகூரும் நாளாகும் என்றும், உயிர்நீத்த உறவுகளின் நினைவுகளை என்றும் மறக்க முடியாது என்றும் அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
