
தேனீக்கள் அழிவின் விளிம்பில்; இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு எச்சரிக்கை மணி
இலங்கையில் தேனீக்கள் உள்ளிட்ட மகரந்தச்சேர்க்கை உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவது, நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் விவசாயத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். விவசாயத் திணைக்களத்தின் தகவல்களின்படி, தேனீக்களின் மகரந்தச்சேர்க்கை மூலம் பல பயிர்களின் விளைச்சலை 20 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும். எனினும், நவீன விவசாய முறைகள், வாழ்விட அழிப்பு மற்றும் அதிகளவிலான இரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக தேனீக்களின் எண்ணிக்கை கவலைக்கிடமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. பெரிய அளவிலான […]









