இலங்கையில் தங்க விலையில் இன்று (04) குறைவு பதிவாகியுள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 387,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 356,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 48,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்க விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு சாதகமான செய்தியாகக் கருதப்படுகிறது.

