
ஈ. ஜீன் கேரொல் வழக்கு: ட்ரம்ப்பின் மறுபரிசீலனை மனுவை மீண்டும் நிராகரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம்
எழுத்தாளர் ஈ. ஜீன் கேரொலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்க உத்தரவிட்ட சிவில் வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மீண்டும் பரிசீலிக்கக் கோரிய மனுவை அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கேரொல் வழக்கில் ட்ரம்ப்புக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பரிசீலிக்க அமெரிக்க உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் மறுத்திருந்தது. இதையடுத்து, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ட்ரம்ப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், நீதிமன்றம் எந்தவொரு […]









