
லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மே மாதத்திலும் விநியோகம் தடையின்றி நடைபெறும் என லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே 20,500 மெட்ரிக் டொன் எரிவாயு நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் டொன் விரைவில் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் நிலைத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, 20,000 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிய பெரிய கப்பல் ஒன்று தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடையத் தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. […]









