லிட்ரோ சமையல் எரிவாயுவின் ஜூன் மாதத்துக்கான விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் 5ஆம் திகதி முதல் புதிய எரிவாயு விலையை அமல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இறுதி அறிக்கை ஜூன் 4ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலை மாற்றங்கள் மற்றும் இறக்குமதி செலவுகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இம்முறை விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
இதனால், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் அதிகரிப்பா அல்லது குறைப்பா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
