News

News, World News

சர்வதேச சந்தையில் தங்க விலை உயர்வு

சர்வதேச சந்தையில், இன்றையதினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,766.53 டொலர்களாக விற்பனையாகின்றது. அதேநேரம், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.25 டொலர்களாக விற்பனையாகின்றது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஆரம்பித்துள்ளன. இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளமை இந்த விலை மாற்றத்திற்கு காரணமாக

News, World News

அமெரிக்கா–ஈரான் பதற்றம் உச்சத்தில்: இராணுவ முற்றுகை, உலக அரசியலில் அதிர்ச்சி அலை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள இராணுவ முற்றுகை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச அரசியலில் பதற்றம் உச்சநிலையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை மற்றும் ட்ரம்ப்பின் நிலைப்பாடுஅமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்டு இராணுவ முற்றுகை செயல்பாட்டில் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஈரான் சமரச பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் திறந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் எதிர்வினை மற்றும் மக்கள் போராட்டம்அமெரிக்காவின்

Local News, News

ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய

Local News, News

அதிவேக நெடுஞ்சாலையில் 3 நாட்களில் அதிகரித்த வருமானம்!

கடந்த 10ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களில், அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்திய வாகனங்களின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ரூ.163,291,065 வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த காலப்பகுதியில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. இதில், அதிகபட்ச வாகனப் போக்குவரத்தும் வருமானமும் 10ஆம் திகதியிலேயே பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மட்டும் 161,847 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், ரூ.59,815,450 வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News, Uncategorized

புத்தாண்டு காலத்தில் பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல்

புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க, குறிப்பாக பட்டாசு மற்றும் வானவேடிக்கை தொடர்பான செயல்பாடுகளின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி மாதத்தில்

Local News, News

யாழில் புத்தாண்டு வேகம்; ஒன்றை ஒன்று உரசிய பேருந்துகள்!

 யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு வேகத்தில் ஒன்றை ஒன்று முந்த முறப்பட்டபோது இரு பேருந்துகள் உரசி விபத்து சம்பவத்துள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது. காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட நிலையில் இரு பேருந்துகளும் விபத்தில் சிக்கியது. தனியார் பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட அரச பேருந்து முன்னால் வந்த மகிழுந்துக்கு இடம் கொடுக்க

Local News, News

வெற்றிலை விலை அதிகரிப்பு

 நாட்டில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில், வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் ரூ. 400-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிறிய கைப்பிடி வெற்றிலை சுமார் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறண்ட காலநிலை காரணமாக வெற்றிலை அறுவடை குறைந்ததும் வெற்றிலை விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேவேளை சித்திரை புத்தாண்டில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

News, World News

“அமைதிக்காகக் குரல் கொடுக்க அஞ்சமாட்டேன்”: ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு போப் லியோ பதிலடி!

ஈரான் போர் விவகாரத்தில் வத்திக்கான் மற்றும் வெள்ளை மாளிகைக்கு இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விமர்சனங்கள் குறித்து போப் லியோ XIV தனது அதிரடியான பதிலை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், போப் லியோ “குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர்” என்றும், அவர் ஒரு “தீவிர இடதுசாரி” போலச் செயல்படுவதாகவும் சாடியிருந்தார். மேலும், போப் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், போப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப்

News, Uncategorized

கண்டி, கேகாலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட ‘கவனம் செலுத்துக’ (Level 1 – Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   உயர்

Scroll to Top