சர்வதேச சந்தையில் தங்க விலை உயர்வு

சர்வதேச சந்தையில், இன்றையதினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,766.53 டொலர்களாக விற்பனையாகின்றது.

அதேநேரம், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.25 டொலர்களாக விற்பனையாகின்றது.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஆரம்பித்துள்ளன.

இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளமை இந்த விலை மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேநரம், ஈரானின் கடல்சார் போக்குவரத்து மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையிலும் இன்று ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top