அதிவேக நெடுஞ்சாலையில் 3 நாட்களில் அதிகரித்த வருமானம்!

கடந்த 10ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களில், அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்திய வாகனங்களின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ரூ.163,291,065 வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்த காலப்பகுதியில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.

இதில், அதிகபட்ச வாகனப் போக்குவரத்தும் வருமானமும் 10ஆம் திகதியிலேயே பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மட்டும் 161,847 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், ரூ.59,815,450 வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top