News

News, World News

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர்நிறுத்தம்: முழுமையான அமைதிக்கு இன்னும் சந்தேகம்

இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையில் நீடிக்கப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் மோதல்களை முழுமையாக கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலின் தூதுவர் டேனி டானன், லெபனான் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், போர்நிறுத்தத்தை பாதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் இஸ்ரேல் தகுந்த பதிலடி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய […]

News, World News

சர்வதேச சந்தையில் தங்க விலையில் சிறிய சரிவு

சர்வதேச சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) தங்கத்தின் விலையில் சிறிய சரிவு பதிவாகியுள்ளது. இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,701.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது நேற்றைய 4,734.42 டொலருடன் ஒப்பிடுகையில் குறைவாகும். அதேவேளை, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.66 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Astrology, News

இன்றைய ராசி பலன் 24 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 24, 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 11ம் தேதி, கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று மீனத்திலும், மேஷம், மீன ராசியில் 2 கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று தனுசு ராசியில் உள்ள கேட்டை பின்பு மூலம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 24, 2026 சித்திரை மாதம் 11ம் தேதி வெள்ளிக் கிழமை, கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில்

Cinema, News

தமிழக தேர்தல்: மகள்களுடன் வந்து வாக்களித்த ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஜனநாயகக் கடமை நிறைவேற்றினர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து வாக்களித்தார். இதேவேளை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு

News, World News

ஈரானில் மீண்டும் வானூர்தி சேவைகள் ஆரம்பம் – 50 நாட்களுக்குப் பின் விமானப் போக்குவரத்து இயக்கம்

போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி சேவைகள் நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, முதற்கட்டமாக தெஹ்ரான் (Tehran) மற்றும் மஷாத் (Mashhad) நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவைகள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. அதே நாளில் திரும்பும் விமானச் சேவைகளும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த உள்நாட்டு விமான

News, World News

அமெரிக்க கடற்படை முற்றுகை காரணமாக ஈரானுக்கு கடும் பொருளாதார தாக்கம்

அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக ஈரான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். இந்த முற்றுகையால் ஈரானுக்கு தினமும் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவிலிருந்து (Kharg Island) எண்ணெய் ஏற்றுமதி செய்யவும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யவும் முடியாமல் நாடு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News, Uncategorized

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி தொடர்வதற்காக, மேலும் ஒரு டீசல் கப்பல் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது குறித்து கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது, வரவுள்ள கப்பலில் 9,500 மெற்றிக் தொன் டீசல் அடங்கியுள்ளது. மேலும், இந்த மாத இறுதிக்குள் மற்றொரு பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. அந்தக் கப்பலில் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News, World News

தமிழக தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்குமாறு விஜய் அவசர கோரிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைக்குழு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் சிரமத்தை எதிர்கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்றும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8.00 மணி வரை (மேலும் 2 மணி நேரம்)

Local News, News

பெயர் பொறித்த இலக்கத் தகடுகள் வருகிறதா? அறிமுகமாகிறது புதிய நடைமுறை!

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அரசு நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் இந்த தகவல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள கணினி அமைப்பு மிகவும் பழமையானதாகவும், அதில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தற்போதைய கணினி அமைப்பை நவீனமயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த மேம்படுத்தல் நிறைவடைந்த பின்னர், சுமார்

Local News, News

நாட்டில் மருந்து நெருக்கடி அபாயம் – அரசாங்கத்துக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரித்துள்ளது. இந்த மோசமான நிலையைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நடைமுறைசார் தீர்வுகளை கொண்டு வர வேண்டும் எனவும் சபை வலியுறுத்தியுள்ளது. உலகளவில் மருந்து விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் மற்றும் கப்பல் கட்டண உயர்வுகள் விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரூபாயின் பெறுமதி சரிவு மற்றும் இறக்குமதி செலவுகளின் உயர்வு மருந்து இறக்குமதியில்

Scroll to Top