
நீர்கொழும்பு சிறைக் கூரையில் போராடிய பெண் கைதி குறித்து வைரலான ‘வைத்தியபீட மாணவி’ கதை – உண்மையல்ல என உறுதி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் “வைத்தியபீட மாணவி” என்ற உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் கற்பனையானது என உண்மைக் கண்டறியும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தின் போது […]









