
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பலமுறை வெளியீட்டு திகதி மாற்றப்பட்ட நிலையில், நேற்று உலகம் முழுவதும் திரைப்படம் வெளியிடப்பட்டது. வெளியான முதல் நாளிலேயே, உலகளவில் ரூ.20.66 கோடி வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், திரைப்படத்தின் கதை, சூர்யாவின் நடிப்பு மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருவதால், வரும் நாட்களிலும் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
