
ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிப்பு
நடிகர் அஜித் குமார் தொடர்பான “கிளாடியேட்டர்ஸ்” என்ற ஆவணப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளதுடன், இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் செய்துள்ளார்.
அஜித்தின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆவணப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
