
தமிழக வெற்றிக் கழகத்தின் சமீபத்திய வெற்றியை முன்னிட்டு, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கட்சித் தலைவர் விஜய் அவர்களை பாராட்டியுள்ளார்.
அந்த பதிவில், “அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றும் சிறந்த தலைவராக நீங்கள் உயர வளர என் மனமார்ந்த வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும் கொண்டாடி, சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்த நகரமாக மாற்றும் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி, பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
