
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அவர் உடனடியாக முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.









