இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 72,430 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (15) ஒரே நாளில் மட்டும் 1,195 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களிலேயே 17,051 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண வாரியான தரவுகளின்படி, அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 38,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் மாகாணத்தில் 11,274 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,073 பேரும், மத்திய மாகாணத்தில் 6,026 பேரும் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்டங்களின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்தில் 15,082 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 பேரும் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, டெங்கு தொற்று காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
