
விரிவுரையாளர்கள் பற்றாக்குறையால் நெருக்கடியில் அரசபல்கலைக்கழகங்கள்
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் கடுமையான விரிவுரையாளர் பற்றாக்குறை காரணமாக உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளின் தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க எச்சரித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அரச பல்கலைக்கழகங்களில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திறம்பட செயல்படுவதற்கு 12,000 முதல் 13,000 வரையிலான நிரந்தர விரிவுரையாளர்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதனுடன் மேலும் சுமார் 4,000 தற்காலிக விரிவுரையாளர்களும் அவசியம் […]









