இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவு; புதிய மாற்று விகிதங்கள் வெளியீடு

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வீழ்ச்சி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.327.67 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.337.82 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.437.16 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.452.93 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.376.84 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.391.32 ஆகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top