
அநுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: மரத்தில் மோதி ஆசிரியர் உயிரிழப்பு
அநுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம, கலாவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலாவெவ – புளியங்குளம் வீதியின் பிம்பார பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் முதலில் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அநுராதபுரம் கலாவெவ பகுதியைச் சேர்ந்த […]









