7 லட்சம் பயனாளிகளுக்கு அரசாங்கம் நிதி விடுவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவுகள் நாளை (29) முதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் மொத்தமாக சுமார் 3,493,915,000 ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. இந்த நிதி சுமார் 7 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 625,128 முதிய பயனாளிகளுக்கு 3,125,600,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம் கட்டத்தில் 73,663 பயனாளிகளுக்கு 368,315,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
அனைத்து தகுதியுடைய பயனாளிகளும் தங்களது அஸ்வெசும பயனாளர் வங்கிக் கணக்குகள் மூலம் நாளை முதல் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
