
300க்கும் மேற்பட்ட போத்தல்கள் பறிமுதல்: இரு இடங்களில் சோதனை
ஹொரண மற்றும் நீர்கொழும்பு காவல்துறைப் பிரிவுகளில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், பெருமளவு சட்டவிரோத மதுபானங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஹொரண காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பெல்பொல வத்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 187.5 லீற்றர் (சுமார் 250 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய 60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஹொரண காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, நீர்கொழும்பு […]









