
ஈரானில் இணைய சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடக்கப்பட்டு இன்று (26) 58 நாட்கள் கடந்துள்ளதாக இணைய கண்காணிப்பு அமைப்பு NetBlocks தெரிவித்துள்ளது. இந்த நீண்டகால தடங்கல் தற்போது 1,368 மணித்தியாலங்களை கடந்துள்ளது.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வெடித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் இணைய கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். பின்னர் பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமானதையடுத்து, இந்த கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இணைய முடக்கம் காரணமாக நாடு முழுவதும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
