‘XChat’: வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக புதிய மெசேஜிங் செயலி

Elon Musk தலைமையிலான X நிறுவனம், தனது பயனர்களுக்காக ‘XChat’ எனும் புதிய குறுஞ்செய்தி செயலியை iOS சாதனங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி மூலம், பயனர்கள் தங்களது X கணக்கில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி குரல் அழைப்புகள், காணொளி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

‘எண்ட்-டு-எண்ட்’ என்க்ரிப்ஷன் வசதியுடன் வரும் இந்த செயலி, பாதுகாப்பை முன்னிலைப்படுத்துகிறது. மேலும், விளம்பரங்கள் இல்லாமையும், பயனர்களைக் கண்காணிக்காத தன்மையும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை திருத்துதல், அழித்தல் மற்றும் தானாக மறையும் (disappearing messages) வசதிகள் உள்ளன. அதேபோல், ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் அம்சமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் ஒருங்கிணைக்க திட்டமிட்டிருந்த X நிறுவனம், தற்போது ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை உருவாக்கும் புதிய அணுகுமுறையை பின்பற்றுகிறது. அதன் ஒரு பகுதியாகவே ‘XChat’ அறிமுகமாகியுள்ளது.

தற்போது iOS பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த செயலி, விரைவில் பிற சாதனங்களுக்கும் விரிவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், X நிறுவனம் தனியான பணப்பரிமாற்ற (payments) வசதியையும் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், WhatsApp மற்றும் Messenger போன்ற செயலிகளுக்கு ‘XChat’ கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top