News

Local News, News

சர்வதேச தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு: 93-வது இடம்

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 93-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த தரவரிசையின் படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகின் 39 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது எளிதான விசா நடைமுறைகளின் மூலம் பயணம் செய்ய முடியும். இது அண்மைக் கால நிலைகளை ஒப்பிடுகையில் ஒரு முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், கடந்த கால நிலைகளுடன் ஒப்பிடும் போது இன்னும் பின்னடைவு காணப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. சர்வதேச வான்வழி போக்குவரத்து சங்கத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, 199 நாடுகளின் […]

News, Sports News

பஞ்சாப் முதலிடம் தக்கவைக்குமா? இன்று ஐபிஎலில் இரட்டை மோதல்கள்

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 35 மற்றும் 36ஆவது போட்டிகள் இன்று (25) நடைபெறுகின்றன. இன்றைய முதல் போட்டி பிற்பகல் 3.30க்கு டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. இரவு 7.30க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன்

Local News, News

இலங்கையில் டிஜிட்டல் மாற்றம்: மே 1 முதல் “டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை” அறிமுகம்

இலங்கையில் மோட்டார் வாகன காப்பீட்டு துறையில் புதிய முன்னேற்றமாக, மே 1 முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய முயற்சி, நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் முக்கியமான படியாக கருதப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் காப்பீட்டு அட்டைகளை மாற்றும் இந்த டிஜிட்டல் அட்டை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும் என

News, Sports News

CSK அதிரடி: மும்பையை சுழலில் சுருட்டி மாபெரும் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

Local News, News

இலங்கையில் தங்க விலை மீண்டும் வீழ்ச்சி – சந்தையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் சர்வதேச விலை 4,672 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74 டொலராக உள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் காணப்பட்டு, இன்று (24) தங்கத்தின் விலை சுமார் 2,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய விலை நிலவரப்படி: கிராம் அளவில் பார்க்கும்போது: சர்வதேச

Local News, News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை:நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைச் சார்ந்த விசாரணைகளில் புதிய தகவல்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில், பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை மூன்று முறை நேரில் சந்தித்து பேசியதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புகளின் போது பேராசிரியர் குணரத்னவுடன் இரு பெண்களும்

Local News, News

கொழும்பு நோக்கி சென்ற சாகரிகா தொடருந்து தடம்புரண்டது

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி கரையோர மார்க்கத்தில் பயணித்த ‘சாகரிகா’ விரைவு தொடருந்து இன்று (24) காலை வாதுவ பகுதியில் தடம்புரண்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, கரையோர மார்க்கத்தில் இயக்கப்படும் தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

News, World News

ஹோர்முஸ் பதற்றம் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்வு

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தொடர்ச்சியான பதற்றம் காரணமாக, உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையால் மசகு எண்ணெய் விலை இன்று அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் பிரெண்ட் ரக எண்ணெய் விலை 106.80 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது கடந்த புதன்கிழமை பதிவான விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 சதவீத உயர்வாகும். மேலும், கடந்த இரண்டு வாரங்களில் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியுள்ளது.

News, World News

ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) மூலம் அரசை மாற்றும் ஐக்கிய அரபு இராச்சியம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சையத் அல் நஹ்யானின் வழிகாட்டுதலின் கீழ், புதிய அரசாங்க மாதிரி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசுத் துறைகள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளில் 50 சதவீதத்தை ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) எனப்படும் தன்னாட்சி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி குறித்து பிரதமர் ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் தனது ‘X’ சமூக

News, World News

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர்நிறுத்தம்: முழுமையான அமைதிக்கு இன்னும் சந்தேகம்

இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையில் நீடிக்கப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் மோதல்களை முழுமையாக கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலின் தூதுவர் டேனி டானன், லெபனான் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், போர்நிறுத்தத்தை பாதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் இஸ்ரேல் தகுந்த பதிலடி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய

Scroll to Top