News

Local News, News

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு: VAT மற்றும் தடுத்து வைக்கப்படும் வரிக்கான காலக்கெடுக்கள்

2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான பெறுமதி சேர் வரி (VAT) தொகையை ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த வரியை உரிய காலத்துக்குள் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு ஆணை மூலம் செலுத்தப்படும் வரித் தொகை, உரிய காலக்கெடுவுக்குப் பின்னர் திணைக்களத்துக்கு கிடைத்தால், அது தாமதமான செலுத்துகையாகக் கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

News, Uncategorized

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

பரீட்சார்த்திகளின் வசதிக்காக சுமார் 1,700 ‘சிசு செரிய’ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார். இதேவேளை, உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை பாடசாலை பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பரீட்சைக் காலப்பகுதியில் பாடசாலை பேருந்து சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சைக் காலம் முழுவதும் தொடருந்துகள் வழக்கமான கால அட்டவணைக்கு

Local News, News

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திருத்தத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,

Local News, News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை மாஅதிபர் தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், வாக்குமூலம் வழங்குவதற்காக சாகர காரியவசம் இன்று மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திற்கு (CCIB) வருகை தந்துள்ளார். இதன்போது, அவரை மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மாஅதிபர் தொடர்பில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Local News, News

பேராதனை மருத்துவமனை ஒப்பந்தம்: கையூட்டு வழக்கில் இருவர் கைது

ரூ.20 இலட்சம் கையூட்டல் பணத்தைக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. விசாரணைகளின்படி, பேராதனைப் போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக, முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமனாரின் பெயர்களில் விலைமனு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படாமல் இருப்பதற்கும், அதன் மூலம் போட்டித்தன்மையைத் தவிர்ப்பதற்கும் முதலாவது சந்தேகநபர் ஆரம்பத்தில் ரூ.30 இலட்சம் கையூட்டல் கோரியுள்ளார். பின்னர் அந்தத் தொகை ரூ.25

Local News, News

சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வில் ரூ.7 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் பறிமுதல்

ஹொரணை, கொபவகவத்தை பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான இரத்தினக் கல் அகழ்வு நடவடிக்கையை வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்து முறியடித்துள்ளனர். நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, இரத்தினக் கல் வர்த்தகர்கள் மூவர் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அகழ்வு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட 11 படகுகள், 5 மோட்டார்கள் மற்றும் பல்வேறு இயந்திரங்கள்,

News, Uncategorized

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; 5 மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண் (Heat Index) “எச்சரிக்கை” மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறிப்பாக பிற்பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

News, Uncategorized

“பேருந்துகளை அதிகரிப்பதால் மட்டும் அரச போக்குவரத்து பிரச்சினைகள் தீராது” என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச.) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத் துறையை மேலும் பாதிக்கும் என்றும், முறையான ஆய்வுகள் இன்றி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது “தேசியக் குற்றம்” போன்றது என்றும் அந்தச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இ.போ.ச.க்கு புதிய பேருந்துகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு

News, Sports News

ரகசியமாக போட்டி பார்க்க வந்த மெஸ்ஸி; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்குப் பின்னர், ஆர்ஜென்டீனா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி முதன்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகருக்கு அருகிலுள்ள அரோயோ செகோ (Arroyo Seco) பகுதியில் நடைபெற்ற ‘பிரைமேரா சி’ (Primera C) நான்காம் தர லீக் போட்டியொன்றை பார்வையிடுவதற்காகவே மெஸ்ஸி அங்கு சென்றுள்ளார். மெஸ்ஸியின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் லியோன்ஸ் எஃப்.சி (Leones FC) அணிக்கும் சென்ட்ரல் கோர்டோபா அணிக்கும் இடையிலான போட்டியை, அவர்

News, World News

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலம், சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலில் சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலை நடத்திய நபர் யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Scroll to Top