June 2026

Local News, News

பாடசாலைகளில் வெளிப்புற திட்டங்களுக்கு கட்டுப்பாடு: கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

அரசாங்கத்தின் முறையான அங்கீகாரத்தைப் பெறாத எந்தவொரு திட்டமும் அல்லது செயற்பாடும் எந்தக் காரணத்திற்காகவும் பாடசாலைகளுக்குள் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை வளாகத்தில் நேற்று (17) நடைபெற்ற வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், கல்வி தொடர்பான அனைத்து தீர்மானங்களும் […]

Local News, News

பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை உயிரிழப்பு: பஸ் விபத்து தொடர்பில் விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஆசிரியை நிலைதடுமாறி கீழே விழுந்து, பஸ்ஸின் பின்சக்கரத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் பூனாவை கல்கந்தேகம

Local News, News

வெளிநாட்டு நாணய சந்தையில் மாற்றம் – அமெரிக்க டொலர் விற்பனை விலையில் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதத் தகவல்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று ஒப்பிடுகையில் சற்றுக் குறைந்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 339.06 ஆக பதிவாகியுள்ளது. நேற்று (17) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 339.90 ஆக காணப்பட்ட நிலையில், இன்று அதன் பெறுமதி சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டு நாணய சந்தையின் நிலவரம், டொலருக்கான கேள்வி மற்றும் வழங்கல், அத்துடன்

Astrology, News

இன்றைய ராசி பலன் 16 ஜூன் 2026

இன்று 16 ஜூன் 2026 செவ்வாய்க் கிழமை, பராபவ வருடம், ஆனி மாதம் 02ம் தேதி மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் சூரியன், சந்திரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை யோகம் கிடைக்கக்கூடிய நாள். இன்று விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சந்திர தரிசன நாள். இன்று ஜூன் 16, 2026 ஆனி மாதம் 02ம் தேதி செவ்வாய்க்

News, World News

அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முடிவு: வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

100 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் அமெரிக்கா – ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் இணங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூன் 15ஆம் திகதி இரவு முதல் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டிருந்த கடற்படை முற்றுகை நீக்கப்படுவதுடன், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ்

News, World News

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்வு!

சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் போர்ப் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,358.2 அமெரிக்க டொலராகவும், வெள்ளியின் விலை 71.07 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்க விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், தற்போதைய சர்வதேச உயர்வு காரணமாக இலங்கையிலும் தங்க விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Local News, News

2026 உயர்தரப் பரீட்சைத் திகதிக்கு எதிர்ப்பு: மாணவர்களுக்கு அநீதி என கம்மன்பில குற்றச்சாட்டு

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர (A/L) பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை, இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அநீதியை ஏற்படுத்துவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பரீட்சைத் திகதியை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து பிற்போட வேண்டும் என்றும், இல்லையெனில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

Local News, News

தடுத்துவைக்கப்பட்டோரின் உரிமைகள் குறித்து ஆய்வு: வெலிக்கடைக்கு ஐ.நா. குழு செல்லவுள்ளது

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் (SPT) பிரதிநிதிகள், வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (16) அல்லது நாளை (17) களவிஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகிறதா என்பதை மதிப்பீடு செய்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு திங்கட்கிழமை (15) இலங்கையை வந்தடைந்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தக் குழுவில், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா

Local News, News

ஒரே நாளில் பல விபத்துகள்: இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (15) இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். அவற்றில் ஒன்றாக, மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை – வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் கேபிள் கம்பி ஒன்று இழுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வெஹிகல பகுதியிலிருந்து கடுவெல நோக்கி

Local News, News

டெங்கு பரவல் தீவிரம்: அதி-அபாய வலயங்கள் 84 ஆக உயர்வு

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் தீவிரமடைந்து, பாரிய தொற்றுநோய் நிலையை எட்டியுள்ளதாக நிர்வாக சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில், நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு அதி-அபாய வலயங்களின் எண்ணிக்கை 74 இலிருந்து 84 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை உள்ளிட்ட

Scroll to Top