
இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாளாந்த செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.342.00 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.332.27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (04) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.340.25 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று அது மேலும் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, இலங்கை ரூபாயுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
