
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் (Amber) நிற அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நாட்டிற்கு வடகிழக்குத் திசையில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையுடனான காலநிலையும் பலத்த காற்றுடனான சூழ்நிலையும் தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின் […]









