
களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற விபத்தில் தொடருந்து பெட்டி ஒன்று தடம் புரண்டு கவிழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிறுகாயங்களுக்கு உள்ளான 10 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக அந்தப் பாதையில் இயங்கிய தொடருந்து சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடம் புரண்ட தொடருந்து பெட்டியை மீட்கும் பணிகளில் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
