World News

News, World News

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர்நிறுத்தம்: முழுமையான அமைதிக்கு இன்னும் சந்தேகம்

இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையில் நீடிக்கப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் மோதல்களை முழுமையாக கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலின் தூதுவர் டேனி டானன், லெபனான் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், போர்நிறுத்தத்தை பாதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் இஸ்ரேல் தகுந்த பதிலடி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய […]

News, World News

சர்வதேச சந்தையில் தங்க விலையில் சிறிய சரிவு

சர்வதேச சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) தங்கத்தின் விலையில் சிறிய சரிவு பதிவாகியுள்ளது. இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,701.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது நேற்றைய 4,734.42 டொலருடன் ஒப்பிடுகையில் குறைவாகும். அதேவேளை, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.66 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

News, World News

ஈரானில் மீண்டும் வானூர்தி சேவைகள் ஆரம்பம் – 50 நாட்களுக்குப் பின் விமானப் போக்குவரத்து இயக்கம்

போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி சேவைகள் நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, முதற்கட்டமாக தெஹ்ரான் (Tehran) மற்றும் மஷாத் (Mashhad) நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவைகள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. அதே நாளில் திரும்பும் விமானச் சேவைகளும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த உள்நாட்டு விமான

News, World News

அமெரிக்க கடற்படை முற்றுகை காரணமாக ஈரானுக்கு கடும் பொருளாதார தாக்கம்

அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக ஈரான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். இந்த முற்றுகையால் ஈரானுக்கு தினமும் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவிலிருந்து (Kharg Island) எண்ணெய் ஏற்றுமதி செய்யவும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யவும் முடியாமல் நாடு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News, World News

தமிழக தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்குமாறு விஜய் அவசர கோரிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைக்குழு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் சிரமத்தை எதிர்கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்றும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8.00 மணி வரை (மேலும் 2 மணி நேரம்)

News, World News

“பாடசாலைகளில் போன் பயன்படுத்தினால்? இனி கடும் சட்ட நடவடிக்கை!”

இங்கிலாந்தில் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுவரை வழிகாட்டுதலாக மட்டுமே இருந்த இந்தக் கட்டுப்பாடு, இனி சட்டமாக மாற்றப்பட உள்ளது. ‘சிறுவர் நலன்புரி மற்றும் பாடசாலைகள் சட்டமூலம்’ தடையின்றி நிறைவேற்றப்படுவதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களும், சிறுவர் பாதுகாப்பு குறித்த கவலைகளும் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் ஜாக்கி ஸ்மித், பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில், பாடசாலை

News, World News

முடிவை தீர்மானிக்கும் நாள்: தமிழக சட்டசபை தேர்தல் நாளை ஆரம்பம்!

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, நாளை (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில், சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக்

News, World News

அமெரிக்கா – ஈரான் இடையில் புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை இஸ்லாமாபாத்தில்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை புதன்கிழமை (22) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக இரண்டு அதிகாரிகள் எசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.தற்போது நடைமுறையிலுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன. மறுபுறம், இந்த பேச்சுவார்த்தையில்  ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில்

News, World News

போர் பதற்றம் தீவிரம்: ஹோர்முஸ் நீரிணை கப்பல் விவகாரம் – அமெரிக்க பேச்சுக்கு ஈரான் மறுப்பு

அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் மோதல் சூழ்நிலை மற்றும் போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களே இந்த முடிவுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அந்தப் பகுதியில் ஈரானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதையும், கடல்சார் முற்றுகை தொடர்வதையும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. ‘டூஸ்கா’ எனப்படும் ஈரானிய கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை

News, World News

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சர்வதேச சந்தையில் அதிரடி ஏற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றமான நிலையும் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (19) குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,831.23 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் 80.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு உலக அரசியல் சூழ்நிலைகளும், அமெரிக்க டொலரின் வலுவூட்டலும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில்

Scroll to Top