
போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – யாழ். அரசாங்க அதிபர்
யாழ்ப்பாணம்: போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு அரச துறையினர் மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வலியுறுத்தியுள்ளார். புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (21) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். புனர்வாழ்வு பணியகத்தின் செயற்பாடுகள் மாவட்ட மட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு […]









