
சர்வதேச எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
சமீபத்திய வர்த்தகத் தரவுகளின்படி, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.94 அமெரிக்க டொலர்களால் அல்லது 2.69 சதவீதத்தால் குறைந்து, 90.54 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலையும் சரிவைக் கண்டுள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 1.94 அமெரிக்க டொலர்களால் குறைந்து, 93.09 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள், உற்பத்தி அளவுகள் மற்றும் பொருளாதார எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட காரணிகள் எரிசக்தி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
