April 2026

Local News, News

அதிவேக நெடுஞ்சாலையில் 3 நாட்களில் அதிகரித்த வருமானம்!

கடந்த 10ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களில், அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்திய வாகனங்களின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ரூ.163,291,065 வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த காலப்பகுதியில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. இதில், அதிகபட்ச வாகனப் போக்குவரத்தும் வருமானமும் 10ஆம் திகதியிலேயே பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மட்டும் 161,847 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், ரூ.59,815,450 வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News, Uncategorized

புத்தாண்டு காலத்தில் பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல்

புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க, குறிப்பாக பட்டாசு மற்றும் வானவேடிக்கை தொடர்பான செயல்பாடுகளின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி மாதத்தில்

Local News, News

யாழில் புத்தாண்டு வேகம்; ஒன்றை ஒன்று உரசிய பேருந்துகள்!

 யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு வேகத்தில் ஒன்றை ஒன்று முந்த முறப்பட்டபோது இரு பேருந்துகள் உரசி விபத்து சம்பவத்துள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது. காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட நிலையில் இரு பேருந்துகளும் விபத்தில் சிக்கியது. தனியார் பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட அரச பேருந்து முன்னால் வந்த மகிழுந்துக்கு இடம் கொடுக்க

Local News, News

வெற்றிலை விலை அதிகரிப்பு

 நாட்டில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில், வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் ரூ. 400-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிறிய கைப்பிடி வெற்றிலை சுமார் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறண்ட காலநிலை காரணமாக வெற்றிலை அறுவடை குறைந்ததும் வெற்றிலை விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேவேளை சித்திரை புத்தாண்டில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

News, World News

“அமைதிக்காகக் குரல் கொடுக்க அஞ்சமாட்டேன்”: ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு போப் லியோ பதிலடி!

ஈரான் போர் விவகாரத்தில் வத்திக்கான் மற்றும் வெள்ளை மாளிகைக்கு இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விமர்சனங்கள் குறித்து போப் லியோ XIV தனது அதிரடியான பதிலை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், போப் லியோ “குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர்” என்றும், அவர் ஒரு “தீவிர இடதுசாரி” போலச் செயல்படுவதாகவும் சாடியிருந்தார். மேலும், போப் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், போப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப்

News, Uncategorized

கண்டி, கேகாலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட ‘கவனம் செலுத்துக’ (Level 1 – Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   உயர்

News, Sports News

ஐபிஎல் 2026: RCB போட்டியின் போது நிகழ்ந்த பரபரப்பு – 48 மணிநேரத்தில் பதிலளிக்க உத்தரவு

குவஹாத்தியில் நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முகாமையாளர் ரோமி பிந்தர் கைபேசி பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, வீரர்களுக்கான ஒதுக்கப்பட்ட பகுதியில் அமர்ந்திருந்த முகாமையாளர் ரோமி பிந்தர், கைபேசி பயன்படுத்தும் காட்சிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகின. ஐபிஎல் விதிகளின்படி, போட்டி நடைபெறும் போது ‘வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கான பகுதியில்’ கைபேசி

Astrology, News

பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

புது வருடம் பிறக்கும் நேரம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி 32 நிமிடத்துக்கு உதயமாகின்றது. விஷு புண்ணிய காலம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.32 மணி முதல் அன்று பிற்பகல் 1.32 மணி வரை புது வருட புத்தாடை சிவப்பு அல்லது வெள்ளை நிறப் பட்டாடை கை விஷேடம் மற்றும் புதுக்கணக்கு, வியாபாரம் தொடங்கல் 15.04.2026 – புதன் முற்பகல் 9.32 மணி முதல் 10.02 மணி வரை அடுப்பு மூட்டுதல் 14.04.2026 – செவ்வாய் – பிற்பகல்

News, World News

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நெருக்கடி தீவிரம்: டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத் துறை திணறல்

ஈரான் போர் காரணமாக உலகளவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டிய நிலையில், அவுஸ்திரேலியா கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நீண்டதூரப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘ரோட் ட்ரெயின்கள்’ எனப்படும் பெரிய பாரவூர்திகள், டீசல் விலை அதிகரிப்பால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. போருக்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் 180.2 சென்ட் இருந்த நிலையில், தற்போது அது 312.7 சென்ட்டாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையும் 171 சென்ட்டில் இருந்து 240.1 சென்ட்டாக அதிகரித்துள்ளது.

News, World News

அந்தாடிக்காவின் “ஆபத்தான வலயத்தில்” புதிதாக கண்டறியப்பட்ட மர்மத் தீவு!

அந்தார்டிக்காவின் வடமேற்கு வெடெல் கடல் பகுதியில், எகிப்தின் கிசா பிரமிடு அளவுக்கு ஒப்பிடத்தக்க புதிய தீவு ஒன்றை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. ‘போலார்ஸ்டெர்ன்’ எனப்படும் பனிக்கப்பலில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் ஆய்வில் ஈடுபட்டிருந்த 93 பேர் கொண்ட குழுவினர், கடும் புயல் காரணமாக ஒரு பகுதியில் தற்காலிகமாக தஞ்சமடைந்தபோது இந்த நிலப்பரப்பைக் கவனித்தனர். முதலில், இது ஒரு “அழுக்கடைந்த பனிப்பாறை” (Dirty Iceberg) என தவறாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் ட்ரோன் ஆய்வுகள்

Scroll to Top